ஸ்ரீ மங்கலமுடையார் சாஸ்தா - ஸ்ரீ நாகபூதப் பெருமாள்
ஸ்ரீ மங்கலமுடையார் சாஸ்தா - ஸ்ரீ நாகபூதப் பெருமாள் தல வரலாறு
ஆகிய இரு தெய்வங்களும் எழுந்தருளி அருள் பாலித்து வருகின்ற சிறிய திருக்கோவிலின் வரலாறு இந்த கோவில் நிறுவப்பட்ட இடத்தை. சூரங்குடி கிராமத்தில் வசித்து வந்த சிவ பக்தனும், வேளாளருமாகிய கிராமத்துப் பண்ணையார் உயர் தெய்வத்திரு. ஆ. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் தங்கள் சொந்த நிலங்களில், கிராமத்துக் குளத்தங்கரை ஓரமாக உள்ள நல் நிலங்களில் ஒரு பகுதியை நன்கொடையாக மனமுவந்து எழுதிக்கொடுத்து உதவினார்கள். அன்றியும் திருக்கோவிலுக்கு வேண்டிய தண்ணீர் வசதிக்காக ஒரு கிணறு வெட்டவும் ஏற்பாடு செய்து தந்தார்கள் திருக்குறுங்குடி கிராமத்திலிருந்து ஒரு ஆச்சாரியாரை வரவழைத்து அவருக்கு இரு வருடத்திற்குள்ள கோவில் பூஜை செய்வதற்கு நெல்லை ஊதியமாக கொடுக்கவும் ஏற்பாடு செய்தார்கள். அன்றியும் கோவில் பூசையை நடத்திவரும் அர்ச்சகருக்குக் குடியிருக்க, கிராமத்தில் வீடு கட்டிக் கொடுத்து உதவினார்கள். அர்ச்சகர் குடும்பத்தில் பட்டவர்கள் அதே இடத்தில் பரம்பரை, பரம்பரையாக இன்றும் வசித்து வருகிறார்கள். பண்ணையார் வழி வந்தவர்களும், உள்ளூர் வாசிகள் யாவரும், பிற ஊர்களில் குடியேறி வசித்துவரும் சூரங்குடி மக்களும் ஒன்று சேர்ந்து திருக்கோவில் கைங்கரியங்கள் தவறாமல் நடக்கும்படி உதவி வருகிறார்கள்.குறிப்பாக தெய்வத்திரு. சு. ஆண்டியப்ப பிள்ளை அவர்கள் மகன் தெய்வத்திரு. ஆ. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் தன் தாத்தா வழி வந்த குடும்பத்தைச் சார்ந்தவர்களை, ஒரு பொறுப்புக் கழகம் அமைத்து காலை பூஜை வழிபாடுகளைச் செய்ய ஏற்பாடு செய்து வந்திருக்கிறார்கள்.
Events - நிகழ்வுகள்
ஶ்ரீ மஹாகணபதி துணை!!!
ஸ்ரீ மங்கலமுடையார் சாஸ்தா ஸஹாயம்!!
ஸ்ரீ நாகபூதத்தார் ஸஹாயம்!!
ஏழாம் ஆண்டு வருஷாபிஷேக விழா அழைப்பிதழ்...
அன்புடையீர்
அனைவருக்கும் வணக்கம்.🙏
ஸ்ரீ மங்கலமுடையார் சாஸ்தா ஸ்ரீ நாகபூதத்தார் கோவில் ஏழாம் ஆண்டு வருஷாபிஷேக விழா ஆவணி மாதம்-10ம் தேதி நாள்:27.08.2026 வியாழக்கிழமை பௌர்ணமி திதியும்,அவிட்டம் நட்க்ஷத்திரமும் கூடிய சுபயோக சுபதினத்தன்று காலை 10;35 மணிக்குமேல் 12;00 மணிக்குள் நடைபெற உள்ளது.
ஆகவே, பக்தகோடிகள் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சுவாமியின் அருள் பெற்றுச் செல்லுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.🙏🙏🙏
நிகழ்ச்சி நிரல்:
|
காலை 07.35 மணி முதல் 10:30 மணி வரை |
மங்களஇசை, தேவதானுக்கை,ஸ்ரீவிக்னேஷ்வரபூஜை,சங்கல்பம், புண்யாஹவாசனம், கும்பபூஜை, ஜபம், மூலமந்த்ரஹோமம், மஹாபூர்ணாஹுதி, தீபாராதனை, அதனைத்தொடர்ந்து மூலாலய மூர்த்திகளுக்கு மஹாபிஷேகம் நடைபெறும். |
|
காலை 10:35 மணிக்கு மேல் 11:00 மணிக்குள் |
கோபுர விமானம் மற்றும் ஸ்ரீ மங்கலமுடையர் சாஸ்தா, ஸ்ரீ நாக பூத பெருமாள் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு வருஷாபிஷேக கும்பாபிஷேகம் நடைபெறும். |
| பகல் 12.00 மணிக்கு | அலங்கார தீபாராதனை, அருள்பிரசாதம் வழங்குதல். |
குறிப்பு: நமது ஆலய வருஷாபிஷேக விழாவிற்கு பக்தர்கள் தங்களால் இயன்ற பொருளுதவி மற்றும் நிதியுதவி செய்து நல்ல ஒத்துழைப்புஅளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஸ்வாமியே சரணம் ஐயப்பா!!! ஓம் நமோ நாராயணாய!!!
-சுபம்-
சூரன்குடி அருள்மிகு ஶ்ரீ செல்லமுத்து அம்மன் திருக்கோவில் கொடை விழாவானது (21.07.2026)ஆடி மாதம் 5ஆம் தேதி செவ்வாய்கிழமை நடைபெறுகிறது. பக்தகோடிகள், உற்றார் உறவினர் மற்றும் சொந்தபந்தங்கள் அனைவரும் வருகை தந்து செல்லமுத்து அம்பாள் அருள்பெற்று செல்லுமாறு உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.. 🙏🙏🙏
ஶ்ரீ மஹாகணபதி துணை!!!
ஸ்ரீ மங்கலமுடையார் சாஸ்தா ஸஹாயம்!!
ஸ்ரீ நாகபூதத்தார் ஸஹாயம்!!
ஆறாம் ஆண்டு வருஷாபிஷேக விழா அழைப்பிதழ்...
அன்புடையீர்
அனைவருக்கும் வணக்கம்.🙏
ஸ்ரீ மங்கலமுடையார் சாஸ்தா ஸ்ரீ நாகபூதத்தார் கோவில் ஆறாம் ஆண்டு வருஷாபிஷேக விழா ஆவணி மாதம் 21-ம் தேதி (06.09.2025) சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. ஆகவே, பக்தகோடிகள் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சுவாமியின் அருள் பெற்றுச் செல்லுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
"மேலும் ஆலய வருஷாபிஷேக விழாவிற்கு சுமார் ஒரு இலட்சம் ரூபாய் வரை தேவைப்படுவதால் பக்தர்கள் பெருமளவு பொருளுதவி மற்றும் நிதியுதவி அளிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்"
|
.அனைவரும் வருக!!! ஐயன் அருள் பெறுக!!!
Gallery