ஸ்ரீ மங்கலமுடையார் சாஸ்தா - ஸ்ரீ நாகபூதப் பெருமாள்

ஸ்ரீ மங்கலமுடையார் சாஸ்தா - ஸ்ரீ நாகபூதப் பெருமாள் தல வரலாறு

அருள்மிகு ஸ்ரீ மங்கலமுடையார் மற்றும் ஸ்ரீ நாகபூதத்தார்

ஆகிய இரு தெய்வங்களும் எழுந்தருளி அருள் பாலித்து வருகின்ற சிறிய திருக்கோவிலின் வரலாறு இந்த கோவில் நிறுவப்பட்ட இடத்தை. சூரங்குடி கிராமத்தில் வசித்து வந்த சிவ பக்தனும், வேளாளருமாகிய கிராமத்துப் பண்ணையார் உயர் தெய்வத்திரு. ஆ. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் தங்கள் சொந்த நிலங்களில், கிராமத்துக் குளத்தங்கரை ஓரமாக உள்ள நல் நிலங்களில் ஒரு பகுதியை நன்கொடையாக மனமுவந்து எழுதிக்கொடுத்து உதவினார்கள். அன்றியும் திருக்கோவிலுக்கு வேண்டிய தண்ணீர் வசதிக்காக ஒரு கிணறு வெட்டவும் ஏற்பாடு செய்து தந்தார்கள் திருக்குறுங்குடி கிராமத்திலிருந்து ஒரு ஆச்சாரியாரை வரவழைத்து அவருக்கு இரு வருடத்திற்குள்ள கோவில் பூஜை செய்வதற்கு நெல்லை ஊதியமாக கொடுக்கவும் ஏற்பாடு செய்தார்கள். அன்றியும் கோவில் பூசையை நடத்திவரும் அர்ச்சகருக்குக் குடியிருக்க, கிராமத்தில் வீடு கட்டிக் கொடுத்து உதவினார்கள். அர்ச்சகர் குடும்பத்தில் பட்டவர்கள் அதே இடத்தில் பரம்பரை, பரம்பரையாக இன்றும் வசித்து வருகிறார்கள். பண்ணையார் வழி வந்தவர்களும், உள்ளூர் வாசிகள் யாவரும், பிற ஊர்களில் குடியேறி வசித்துவரும் சூரங்குடி மக்களும் ஒன்று சேர்ந்து திருக்கோவில் கைங்கரியங்கள் தவறாமல் நடக்கும்படி உதவி வருகிறார்கள்.குறிப்பாக தெய்வத்திரு. சு. ஆண்டியப்ப பிள்ளை அவர்கள் மகன் தெய்வத்திரு. ஆ. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் தன் தாத்தா வழி வந்த குடும்பத்தைச் சார்ந்தவர்களை, ஒரு பொறுப்புக் கழகம் அமைத்து காலை பூஜை வழிபாடுகளைச் செய்ய ஏற்பாடு செய்து வந்திருக்கிறார்கள்.

Events - நிகழ்வுகள்

ஆறாம் ஆண்டு வருஷாபிஷேக விழா

                                                               

ஶ்ரீ மஹாகணபதி துணை!!!        

 ஸ்ரீ மங்கலமுடையார் சாஸ்தா ஸஹாயம்!!     

 ஸ்ரீ நாகபூதத்தார் ஸஹாயம்!!

 

 ஆறாம் ஆண்டு வருஷாபிஷேக விழா அழைப்பிதழ்...

அன்புடையீர் 

அனைவருக்கும் வணக்கம்.🙏

ஸ்ரீ மங்கலமுடையார் சாஸ்தா ஸ்ரீ நாகபூதத்தார் கோவில் ஆறாம் ஆண்டு வருஷாபிஷேக விழா ஆவணி மாதம் 21-ம் தேதி (06.09.2025) சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. ஆகவே, பக்தகோடிகள் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சுவாமியின் அருள் பெற்றுச் செல்லுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

"மேலும் ஆலய வருஷாபிஷேக விழாவிற்கு சுமார் ஒரு இலட்சம் ரூபாய் வரை தேவைப்படுவதால் பக்தர்கள் பெருமளவு பொருளுதவி மற்றும் நிதியுதவி அளிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்"

நிகழ்ச்சி நிரல்:

காலை-7:00 மணிக்கு

மங்களஇசை தொடர்ந்து மஹாகணபதி பூஜை, புண்ணியாஹவாஜனம்,கும்பபூஜை,மூலமந்த்ரஹோமங்கள் நடைபெற்று மஹா பூர்ணாஹூதி ,தீபாராதனை நடைபெறும்.

அதைத் தொடர்ந்து மஹாபிஷேகம், கடப்பிரதக்ஷினம்,விமானம்,மூலாலயம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் வருஷாபிஷேக கும்பாபிஷேகம் நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடைபெற்று அருட்பிரசாதங்கள் மற்றும் அன்னதான பிரசாதங்கள் வழங்கப்படும்.

.அனைவரும் வருக!!!                                                                                                           ஐயன் அருள் பெறுக!!!     

                                                                                              -- சுபம் --
icon
ஆவணி மாதம் 21-ம் தேதி-நாள்:06.09.2025 சனிக்கிழமை
icon
திருநெல்வேலி மாவட்டம்,நாங்குநேரி தாலுகா,சூரன்குடி கிராமம்
icon
+91 94439 70831
பங்குனி உத்திர விழா

                                                                            ஸ்ரீ மஹா கணபதி துணை

                                                              ஸ்ரீ மங்கலமுடையார் சாஸ்தா ஸஹாயம்

                                                                       ஸ்ரீ நாக பூதத்தார் ஸஹாயம்

பங்குனி உத்திர விழா அழைப்பிதழ்...

அன்புடையீர்,🙏

நிகழும் மங்களகரமான 1200 ம் ஆண்டு குரோதி வருடம் பங்குனி மாதம் 28ம் நாள் (11-04-2025)- வெள்ளிக்கிழமை சுக்ல பக்ஷ சதுர்த்தசி திதியும் உத்திர நட்சத்திரமும் கூடிய சுபயோக சுப தினத்தன்று நமது ஆலயத்தில் பங்குனி உத்திர விழா சீரும் சிறப்புமாக நடைபெற உள்ளது. ஆகவே பக்த மெய்யன்பர்கள் ஆலயத்திற்கு வந்திருந்து ஆலயத்தில் நடைபெறும் பூஜைகளில் கலந்து கொண்டு ஐயனின் அருளைப் பெற்றுச் செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

 

இப்படிக்கு,
சூரங்குடி கிராமம்

அனைவரும் வருக!!!                                                                                                                                   ஐயன் அருள் பெறுக!!!

icon
பங்குனி மாதம் 28ம் நாள் 11-04-2025 வெள்ளிக்கிழமை
icon
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகா, சூரங்குடி கிராமம்
icon
+91 94439 70831